< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி - சஞ்சய் ராவத்
|14 May 2023 5:18 AM IST
கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி என சஞ்சய் ராவத் கூறினார்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து உத்தவ் பாலாசாகேப் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மேலும் கடவுள் அனுமன் கோஷமிட்டு பிரசாரம் செய்த பா.ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் விமர்சித்தார். இவை தான் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு காரணம்.
இது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தோல்வி. கர்நாடகத்தில் இப்போது என்ன நடந்துள்ளதோ, அது 2024 நாடாளுமன்ற தேர்திலிலும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.