குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்பியது ஏன்?
|குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.
புதுடெல்லி,
அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும் 2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்பின் மூலமாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்தால், ஐந்து வருடங்கள் அவங்கள் இங்கு தங்கியிருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை
எதிர்ப்பு ஏன்?
குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது
எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்