< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதவாத அரசியலால் ஜம்மு காஷ்மீர்தான் அதிகம் பாதிக்கப்பட்டது: மெகபூபா முப்தி
|19 Jan 2023 9:56 AM IST
மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இந்தியாவை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு ஜோடோ யாத்திரையை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மெகபூபா முப்தி கூறினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வகுப்புவாத அரசியலால் ஜம்மு காஷ்மீர்தான் அதிகம் பாதிக்கப்பட வேண்டியிருந்தது.
பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்பது இதைத்தவிர வேறு வழியில்லை. அதேபோல், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இந்தியாவை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு ஜோடோ யாத்திரையை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. பாரத் ஜோடோ யாத்திரையில் நாங்களும் பங்கேற்போம்" என்றார்.