< Back
தேசிய செய்திகள்

Image Courtacy: PTI
தேசிய செய்திகள்
குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சினையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

10 Jun 2022 12:28 AM IST
குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சினையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
நெல் உள்பட 17 வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நேற்று முன்தினம் உயர்த்தியது. இந்தநிலையில், அதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-
காரிப் பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் ஒருமுறை மோடி அரசு துரோகம் செய்து விட்டது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களின் வேதனையை நூறு மடங்கு அதிகரித்து விட்டது என்று அவர் கூறினார்