< Back
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?

தினத்தந்தி
|
28 May 2023 12:09 PM IST

மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.

* 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

* 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

* இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.

* கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

* மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.

* மிர்சாபூர் கம்பளம், நாக புரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

* சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

* மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

* பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.

* அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன. * அரியானாவில் தயாரிக்கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.

* 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. * மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

*நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

* செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.

மேலும் செய்திகள்