< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
|8 Oct 2023 2:32 PM IST
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக இந்தியா 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
60 ஆண்டுகளில் இல்லாத வகையில் 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் உள்ளது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், கடின உழைப்பும் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.