< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

தினத்தந்தி
|
25 Dec 2022 2:17 AM IST

மேற்கு வங்காளத்தில் திட, திரவக்கழிவு மேலாண்மையில் நிலவும் குறைபாடு தொடர்பாக அம்மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை அபராதமாக விதித்தது.

திட, திரவக்கழிவு மேலாண்மை குறைபாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்கு இந்த தொகையை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட ஒரு கணக்கில் ரூ.3500 கோடி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதை சுற்றுச்சூழல் நிவாரணப் பணி தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு மேற்கு வங்காள அரசு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையை பதிவு செய்துகொண்டிருப்பதாகவும், தாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியடி சுற்றுச்சூழல் நிவாரணப் பணிகளை மேற்கு வங்காள அரசு தொடரலாம் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு கடந்த 21-ந் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்