< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்:  தொண்டர் கொலை; கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. அவசர கடிதம்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்: தொண்டர் கொலை; கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி. அவசர கடிதம்

தினத்தந்தி
|
10 Jun 2023 8:39 AM IST

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மத்திய படைகளை ஏற்பாடு செய்யும்படி கவர்னருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வருகிற ஜூலை 8-ந்தேதி ஒரே கட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா கூறினார். இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி வருகிற 15-ந்தேதி ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 2-வது இடம் பிடித்தது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், வெளிப்படையான மற்றும் சிறந்த முறையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற ஏதுவாக, மத்திய படைகளை ஏற்பாடு செய்யும்படி மாநில கவர்னருக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மூர்ஷிதாபாத் மாவட்டத்தின் கார்கிராம் நகரில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

அவருக்கு கார்கிராம் நகர நிர்வாகத்தின் பாதுகாப்பு கிடைத்து உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, வாக்கு இயந்திர தேர்தலை நடத்த விரும்புகிறதா? அல்லது துப்பாக்கி குண்டு தேர்தலை நடத்த விரும்புகிறதா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்