< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: முன்னாள் பா.ஜ.க. எம்.பி. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: முன்னாள் பா.ஜ.க. எம்.பி. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்

தினத்தந்தி
|
20 May 2024 1:37 PM IST

முன்னாள் பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் தொகுதியின் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்தவர் குனார் ஹெம்ப்ராம். இவர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், குனார் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து குனார் ஹெம்ப்ராம் கூறுகையில், "முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி தலைமையின் கீழ், மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார்.

மேலும் செய்திகள்