< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தினத்தந்தி
|
21 July 2022 7:32 AM IST

மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் ஹவுரா பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் தயாரிக்கப்பட்ட நாட்டு சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். இதன் பின்பு, வீட்டுக்கு சென்ற அவர்களில் பலருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது.

இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவர்களை உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆனால் 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும் 20 பேருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த விஷ சாராயத்தை தயாரித்தவர்களை தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்