< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜி.எஸ்.டியை நாம் ஆதரித்தது மிகப்பெரிய தவறு - மம்தா பானர்ஜி பேச்சு
|29 March 2023 4:13 PM IST
ஜி.எஸ்.டியை நாம் ஆதரித்தது மிகப்பெரிய தவறு என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு எதிராகவும், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் கொல்கத்தா நகரில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டம் தொடங்கி உள்ளார்.
பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கவில்லை என கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஜி.எஸ்.டி புதிய விதிகளின் கீழ் மாநிலங்களிடம் இருந்து டெல்லி எல்லா பணத்தையும் எடுத்துக்கொள்கிறது. இந்த நிதி மாநிலங்களுக்கு பயனளிக்கும் என நினைத்தோம் இதை ஆதரித்தது நமது பெரிய தவறு என்றார்.