< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் மாயம்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் மாயம்

தினத்தந்தி
|
9 Feb 2024 12:40 PM IST

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மாயமான 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த பெல்காசியா, ஷிப்பூர் மற்றும் பாக்னான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 பேர் கொண்ட குழு, பாசிம் மெதினிபூர் மாவட்டம் தாஸ்பூரில் உள்ள திரிபெனி பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ரூப்நாராயன் ஆற்றின் நடு பகுதியில் இவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தது.

இந்த படகில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஆற்றின் கரையில் இருந்தவர்கள் அங்கு உள்ள படகுகளில் விரைந்து வந்து முடிந்தவரை அங்கு இருந்தவர்களை மீட்டனர். ஆனால் படகில் இருந்த 5 பேரை கண்டுபிடிக்க முடியாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரிடர் மேலாண்மைக் குழு மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மாயமான 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் மீட்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்