< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் கனரக வாகனங்களில் டிரைவர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என அறிவிப்பு
|10 Jun 2023 4:07 PM IST
கேரளாவில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களில், ஓட்டுநர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களில், ஓட்டுநர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனங்களின் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவரும், சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில், சாலை விபத்துகளில் நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.