< Back
தேசிய செய்திகள்
ஆபரேஷன் பெயரை பயன்படுத்த மாட்டோம் -மந்திரி என்.எஸ்.போசராஜ் பேட்டி
தேசிய செய்திகள்

'ஆபரேஷன்' பெயரை பயன்படுத்த மாட்டோம் -மந்திரி என்.எஸ்.போசராஜ் பேட்டி

தினத்தந்தி
|
27 Aug 2023 12:15 AM IST

‘ஆபரேஷன்’ என்ற பெயரை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று மந்திரி என்.எஸ்.போசராஜ் தெரிவித்துள்ளார்.

ராய்ச்சூர்:-

சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி என்.எஸ்.போசராஜ் ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தவறான பெயர்

அனைத்துக்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் முதல்-மந்திரியை சந்தித்து பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை முதல்-மந்திரியிடம் கூறுகிறார்கள். அதில் அரசியலும் உள்ளது. நாங்கள் 'ஆபரேஷன்' என்ற பெயரை பயன்படுத்த மாட்டோம். அது தவறான பெயர்.

நமது நாட்டின் வரலாற்றில் ஆபரேஷன் என்ற விஷயத்தை பா.ஜனதா தொடங்கியது. அந்த தவறான பெயரை பயன்படுத்த காங்கிரஸ் தயாராக இல்லை. மத்தியபிரதேசம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் இழுத்தது.

'கோ-ஆபரேஷன்'

இதனால் ஜனநாயகத்திற்கு கவுரவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கும் அவப்பெயர் உண்டாகியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய கட்சி காங்கிரஸ். காங்கிரசில் சேர விரும்புபவர்களுடன் உள்ளூர் அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் காங்கிரசுக்கு வர நினைத்தால் அவர்களுடன் மாநில அளவிலான தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பா.ஜனதா செய்வது ஆபரேஷன், நாங்கள் செய்வது 'கோ-ஆபரேஷன்'.

இவ்வாறு என்.எஸ்.போசராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்