< Back
தேசிய செய்திகள்
பிஎப்ஐ தடை நியாயமானதாக இருந்தால் வரவேற்கிறோம் ; முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பேச்சு
தேசிய செய்திகள்

பிஎப்ஐ தடை நியாயமானதாக இருந்தால் வரவேற்கிறோம் ; முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பேச்சு

தினத்தந்தி
|
28 Sept 2022 12:39 PM IST

பிஎப்ஐ தடைக்கான காரணங்கள் நியாயமானதாக இருந்தால் வரவேற்பதாக முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை மத்திய அரசு இன்று சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது. மேலும், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பிஎப்ஐ தடைக்கு கேரளாவை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. ஏகே முனீர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பிஎப்ஐ தடை நியாயமானதாக இருந்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆர்எஸ்எஸ் -க்கு எதிராக நாம் மதச்சார்பற்ற முறையில் போராட வேண்டும். பிஎப்ஐ தடை அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்துவிடாது. இதற்கு முன்னதாக, இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கமும் (சிமி) தடை செய்யப்பட்டது. ஆனால், தேசிய வளர்ச்சி முன்னணி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் பின்னர் உருவாகின' என்றார்.

மேலும் செய்திகள்