ஏழைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம், எளிய முறையில் சட்டங்கள் வேண்டும்; பிரதமர் மோடி பேச்சு
|ஏழைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம், எளிய முறையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, அனைத்து இந்திய சட்ட மந்திரிகள் மற்றும் செயலாளர்களுடனான தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி வழியே இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, காலனியாதிக்க நாட்டின் பின்னடைவு ஏற்படுத்த கூடிய சட்டங்களை நீக்கி, காலனியாட்சி முறையின் விலங்குகளை உடைக்க வேண்டியது நமக்கு முக்கியம்.
அதன்பின்பே, உண்மையான குறிக்கோளுடன் இந்தியா வளர்ச்சி அடைய முடியும். நாட்டில் விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக லோக் அதாலத்துகளும் நிறுவப்பட்டு உள்ளன என சுட்டி காட்டிய பிரதமர் மோடி, பல மாநிலங்கள் இந்த முறையில் நன்றாக பணியாற்றி வருகின்றன என பேசியுள்ளார்.
இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கான பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுழன்று கொண்டிருக்கிறது. அனைத்து சவால்கள் வந்தபோதிலும், இந்திய சமூகம் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்திய சமூகத்தின் மிக பெரிய சிறப்பு என்னவெனில், வளர்ச்சிக்கான பாதையில் நடைபோடும்போது, உள்நாட்டு சீர்திருத்தங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என பேசியுள்ளார்.
சட்டங்கள் எளிய முறையில் மற்றும் வட்டார மொழிகளில் இயற்றப்பட வேண்டும். அப்படி செய்யும்போது, ஏழைகளிலும் உரிமைகள் மறுக்கப்பட கூடிய மிக ஏழை கூட புதிய சட்டங்களை பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.