< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தோம்; நிறைவேற்றினோம்:  அசோக் கெலாட் பேச்சு
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தோம்; நிறைவேற்றினோம்: அசோக் கெலாட் பேச்சு

தினத்தந்தி
|
3 Nov 2023 8:44 PM IST

ராஜஸ்தானில் எங்களுடைய அரசு மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார்.

கராவ்லி,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரசின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் லக்கன் சிங் மீனா ராஜஸ்தானின் கராவ்லி தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அந்த தொகுதிக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று வருகை தந்துள்ளார்.

அவர் கராவ்லி நகரில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாங்கள் என்ன வாக்குறுதி அளித்து இருக்கிறோம். என்ன நிறைவேற்றி இருக்கிறோம் என்று பொதுமக்களுக்கு தெரியும். அதனால், எங்களுடைய அரசு மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நாங்கள் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மக்களுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம் என அவர்களுக்கு தெரியும். வருங்காலத்திலும் கூட, நாங்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுவோம் என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்