< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'மேகதாது திட்டத்தை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுத்துள்ளோம்' - டி.கே.சிவக்குமார்
|28 Jun 2023 2:27 AM IST
மேகதாது திட்டத்தை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
"பெங்களூருவின் வளர்ச்சிக்கு நான் நேர்மையான முறையில் முயற்சி செய்து வருகிறேன். இங்கு துணை நகரங்கள் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தனியாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இதற்காக மேகதாது திட்டத்தை அமல்படுத்த நாங்கள் துரித நடவடிக்கை எடுத்துள்ளோம்."
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.