< Back
தேசிய செய்திகள்
இந்திய விவசாயிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் - விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்
தேசிய செய்திகள்

'இந்திய விவசாயிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்' - விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர்

தினத்தந்தி
|
9 Dec 2023 6:19 PM IST

சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது என விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

விவசாயத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஜனுஸ் வோஜிசோவ்ஸ்கி, இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜனுஸ் வோஜிசோவ்ஸ்கி, "சர்வதேச உணவு பாதுகாப்பை உறுதி செய்ததற்காக இந்திய விவசாயிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். குறிப்பாக சிறு விவசாயிகள், உலகின் மொத்த விவசாய நிலங்களில் 12 சதவீதத்திற்கும் குறைவான நிலத்தைக் கொண்டு, 35 சதவீத உணவை உற்பத்தி செய்துள்ளனர்.

இதுவே இந்திய விவசாயிகள் மற்றும் பெரும்பாலான ஆசிய விவசாயிகளின் வெற்றியாகும். ஏனெனில் ஆசிய நாடுகளில் பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகளாக இருந்தாலும், அதிக உற்பத்தியை கொடுக்கின்றனர். அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும், ஏனென்றால் சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு என்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்