< Back
தேசிய செய்திகள்
இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் - மம்தா பானர்ஜி

Image Courtesy : @AITCofficial twitter

தேசிய செய்திகள்

'இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம்' - மம்தா பானர்ஜி

தினத்தந்தி
|
18 July 2023 4:51 PM IST

பெங்களூரு கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்துள்ளதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, "பெங்களூரு கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் இங்கே ஒன்றாக இணைந்துள்ளோம். விவசாயிகள், ஏழைகளுக்காக நாம் தோள் கொடுத்து நாட்டை அழிவு பாதையில் இருந்து காக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்