< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'தினமும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம்' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
|8 Oct 2023 5:42 PM IST
இஸ்ரோ தினமும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்த்து போராடி வருவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சியில் 16-வது சர்வதேச சைபர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், கேரள வருவாய்த்துறை மந்திரி ராஜீவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ராக்கெட் தொழில்நுட்பத்தில் சைபர் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள வலுவான சைபர் பாதுகாப்பு நெட்வொர்க்கை இஸ்ரோ கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரோ தினமும் நூற்றுக்கணக்கான சைபர் தாக்குதல்களை எதிர்த்து போராடி வருவதாக தெரிவித்த அவர், ராக்கெட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள ஹார்டுவேர் சிப்பை பாதுகாக்க பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.