< Back
தேசிய செய்திகள்
நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு... செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு... செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

தினத்தந்தி
|
1 Aug 2024 9:12 PM IST

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

ஸ்ரீஹரிகோட்டா,

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவு தொடர்பான குறித்த செயற்கைகோள் புகைப்படங்களை இஸ்ரோ தற்போது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் உருவாகி உள்ளது. நிலச்சரிவால் அடித்து செல்லப்பட்ட குப்பைகளின் ஓட்டம் ஆற்றின் போக்கை விரிவுபடுத்தி ஒரு பேரழிவை ஏற்படுத்தியதை இந்த படங்கள் விளக்குகின்றன.

மேலும் செய்திகள்