முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு
|முல்லை பெரியாறு அணையில் 3 ஷட்டர்கள் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது
கேரளா,
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில் கேரள பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 3 ஷட்டர்கள் வழியாக 534 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் முல்லை பெரியாறு அணையில் மத்திய அரசின் விதியின் படி கொண்டு வரப்பட்டுள்ள முறையின் கீழ் நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 3 ஷட்டர்கள் வழியாக 534 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் போது படிப்படியாக ஆயிரம் கன அடி வரைக்கும் உயர்த்தப்படும். இந்த முறையின்படி கேரள அரசுக்கு முறையான தகவலை பொதுப்பணித்துறையினர் கொடுத்து விட்டு காலை 10 மணியளவில் நீர் திறக்கப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் காலையில் நீர் வரத்து குறைந்ததையடுத்து தொடர்ந்து கண்காணித்து தற்போது 3 ஷட்டர்களை திறந்துள்ளனர். முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மேலும் மதகுகள் திறக்கப்பட்டு ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்படலாம்.