< Back
தேசிய செய்திகள்
மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுங்கள்; ஏக்நாத் ஷிண்டேவுக்கு சித்தராமையா கடிதம்
தேசிய செய்திகள்

மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுங்கள்; ஏக்நாத் ஷிண்டேவுக்கு சித்தராமையா கடிதம்

தினத்தந்தி
|
1 Jun 2023 12:15 AM IST

வடகர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. நீரை திறந்துவிட கோரி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு:

வடகர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. நீரை திறந்துவிட கோரி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

குடிநீர் தட்டுப்பாடு

கோடை காலத்தால் வட கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, விஜயாப்புரா, பெலகாவி, கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க வர்ணா, கொய்னா அணையில் இருந்து 3 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரும், உஜ்ஜனி அணையில் இருந்து பீமா ஆற்றில் 3 டி.எம்.சி. நீரும் திறந்து விடுமாறு கோரி ஏற்கனவே தங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.

அதன்படி நீங்கள் ஒரு டி.எம்.சி. நீரை திறந்துவிட்டுள்ளீர்கள். இதற்காக தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால், அந்த பகுதிகளில் இன்னும் குடிநீர் தட்டுப்பாடு நீடிக்கிறது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அதனால் வர்ணா, கொய்னா அணையில் இருந்து 2 டி.எம்.சி.யும், உஜ்ஜனி அணையில் இருந்து 3 டி.எம்.சி. நீரும் திறந்து விடுமாறு கோருகிறேன். மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்