< Back
தேசிய செய்திகள்
குஜராத்: பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் வாகன ஊர்வலம்
தேசிய செய்திகள்

குஜராத்: பிரதமர் மோடியுடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் வாகன ஊர்வலம்

தினத்தந்தி
|
10 Jan 2024 7:41 AM IST

‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’ இன்று நடைபெற உள்ளது.

காந்திபுரம்,

குஜராத் மாநில தலைநகர் காந்தி நகரில் 'துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு' என்ற மாநாடு இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். குஜராத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, 'துடிப்பான குஜராத்' உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்று குஜராத் வந்தார். அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.

இந்நிலையில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், முகமது பின் சயீத் அல் நஹ்யானும் ஒரேகாரில் வாகன ஊர்வலம் சென்றனர். விமான நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு காரில் ஊர்வலமாக சென்றனர். சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள், பாஜகவினர் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களை நோக்கி கை அசைத்தவாறு இரு தலைவர்களும் சென்றனர். ஊர்வலத்தை முடித்துக்கொண்டு இருவரும் காந்திநகர் சென்றடைந்தனர்.

மேலும் செய்திகள்