< Back
தேசிய செய்திகள்
பர்தா அணிந்து நகைக்கடைக்குள் நுழைந்த திருடன்: கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளை - அதிர்ச்சி வீடியோ
தேசிய செய்திகள்

பர்தா அணிந்து நகைக்கடைக்குள் நுழைந்த திருடன்: கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளை - அதிர்ச்சி வீடியோ

தினத்தந்தி
|
21 Jun 2024 7:39 PM IST

பர்தா, ஹெல்மெட் அணிந்து வந்த திருடர்கள் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மெட்செல் நகரில் பரபரப்பான சாலை அருகே நகைக்கடை உள்ளது.

இந்த நகைக்கடையில் நேற்று மதியம் கடை உரிமையாளரும், ஊழியரும் அமர்ந்திருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவர் நகை வாங்குவதுபோல் கடைக்குள் வந்தனர். ஒருவர் புர்கா அணிந்த நிலையில் மற்றொருவர் ஹெல்மெட் அணிந்தார்.

இருவரும் கடைக்குள் வந்த நிலையில் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கடை உரிமையாளரையும், ஊழியரையும் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் கடையின் உள்ளே உள்ள அறைக்குள் சென்றுவிட்டார். இதையடுத்து கடை உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டிய கொள்ளையர்கள் நகைகளை தரும்படி கூறினர். இதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவிக்கவே அவரது கழுத்து அருகே கத்தியால் குத்தினர். இதில், கடை உரிமையாளருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பர்தா , ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து நகைகளை திருடிச்சென்றனர். கடையில் இருந்து கொள்ளையர்கள் வெளியேறிய நிலையில் உரிமையாளரும், கடை ஊழியரும் விரட்டி சென்றனர்.

ஆனால், கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடைக்குள் புர்கா அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்