< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் 25 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 25 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டது

தினத்தந்தி
|
6 Jan 2023 2:35 AM IST

பெங்களூருவில் 25 தொகுதி களுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் 25 தொகுதி களுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

பெயர்களை சேர்க்கும் பணி

பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகளை சிலுமே என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால் அந்த நிறுவனம் வாக்காளர் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலுமே நிறுவனத்தின் தலைவர் உள்பட சிலரை கைது செய்து இருந்தனர்.

சிலுமே நிறுவனம் வாக்காளர் தகவல்களை திருடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை மாநகராட்சி மறுத்து விட்டது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி நியமித்த 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். பெங்களூருவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளிலும் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில் சிவாஜிநகர், சிக்பேட்டை, மகாதேவபுரா ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மற்ற 25 தொகுதிகளில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 81 லட்சத்து 48 ஆயிரத்து 989 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது. அதில் 42 லட்சத்து 26 ஆயிரத்து 701 பேர் ஆண்கள். 39 லட்சத்து 20 ஆயிரத்து 793 பேர் பெண்கள். 1,495 பேர் மூன்றாம் பாலினத்தவர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடப்பதாக கூறி உள்ள துஷார் கிரிநாத், இறுதி வாக்காளர் பட்டியல் http://www.ceokarnataka.kar.nic.in மற்றும் மாநகராட்சி இணையதளமான www.bbmp.gov.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்