< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"காலை வணக்கம் கர்நாடகா... உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்.." - நடிகர் பிரகாஷ் ராஜ் டுவீட்!
|10 May 2023 8:23 AM IST
40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டர் பதிவில்,
காலை வணக்கம் கர்நாடகா...நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக...40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.