< Back
தேசிய செய்திகள்
தாய் உயிரிழப்பு... ஜனநாயக கடமையாற்றிய பின் இறுதிச்சடங்கு செய்த மகன்
தேசிய செய்திகள்

தாய் உயிரிழப்பு... ஜனநாயக கடமையாற்றிய பின் இறுதிச்சடங்கு செய்த மகன்

தினத்தந்தி
|
1 Jun 2024 11:33 AM GMT

முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

பாட்னா,

7-வது மற்றும் கடைசி கட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்த மிதிலேஷ் யாதவ் என்பவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்தார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகுதான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த எனது தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம். ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும். இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்." என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்