< Back
தேசிய செய்திகள்
திகார் சிறையில் ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரி பதிவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

திகார் சிறையில் ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரி பதிவு

தினத்தந்தி
|
16 April 2024 1:22 AM IST

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று குரல் மாதிரிகளை பதிவு செய்தனர்.

புதுடெல்லி,

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட இயக்குனர் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜாபர் சாதிக்கிடம் கைப்பற்றப்பட்ட அவரது செல்போன்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கடத்தல் தொடர்பாக பல பேருடன் அவர் பேசிய விவரங்கள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பதிவான குரல், ஜாபர் சாதிக்கின் குரல்தானா? என்பதை உறுதி செய்ய சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று குரல் மாதிரிகளை பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்