'மனதின் குரல்' நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரை
|மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான யோசனைகள் மற்றும் உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செப்டம்பர் 12 அன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்:-
(#MannKiBaat) இந்தியா முழுவதும் பல்வேறு உள்ளீடுகள் மற்றும் ஊக்கமளிக்கும் கூட்டு முயற்சிகளால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது நமது சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எப்போதும் போல, 25 ஆம் தேதி நடைபெறும் இந்த மாத அத்தியாயத்திற்கான உங்கள் உள்ளீடுகளைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
யோசனைகளை மைகவ், நமோ செயலியில் பகிரலாம் அல்லது செய்தியை பதிவு செய்ய 1800-11-7800 என்ற எண்ணை டயல் செய்யலாம். 1922 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். குறுந்தகவல் மூலம் பெறப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்து பிரதமருக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம்.