< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
என்ஜின் செயலிழப்பு: விஸ்தாரா விமானம் டெல்லியில் அவசர தரையிறக்கம்
|6 July 2022 6:20 PM IST
என்ஜின் செயலிழப்பால் விஸ்தாரா பயணிகள் விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த போது தீடிரென என்ஜினில் ஏற்பட்ட செயலிழப்பால் விஸ்தாரா பயணிகள் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
என்ஜின் செயலிழப்பால் டெல்லியில் விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், விமானம் தரையிறங்கிய பிறகு, என்ஜின்களில் ஒன்றில் "சிறிய" மின் கோளாறு ஏற்பட்டதால் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தது.