வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை ரோடு-ரோலர் வண்டியை ஏற்றி நசுக்கிய போலீஸ்! வித்தியாசமான நடவடிக்கை
|சைலன்சர்கள் ரோடு-ரோலர் இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டது முற்றிலும் வித்தியாசமான ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை அமைந்தது.
விசாகப்பட்டினம்,
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் கழற்றப்பட்டு ரோடு-ரோலர் இயந்திரம் மூலம் வண்டியை ஏற்றி நசுக்கப்பட்ட சம்பவம் அர்ங்கேறியுள்ளது.
விசாகப்பட்டினம் நகர போலீசார், பல்வேறு மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த 631 சைலன்சர்களை, சாலை அமைக்க பயன்படுத்தப்படும் ரோடு-ரோலர் இயந்திரம் மூலம் நசுக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் இருந்து அகற்றப்பட்ட இந்த சைலன்சர்கள் ரோடு-ரோலர் இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டது முற்றிலும் வித்தியாசமான ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை அமைந்தது.
விசாகப்பட்டினம் நகர போலீசார் சமீபகாலமாக, ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது சிறப்பு சோதனை நடத்தினர். அப்போது பல மோட்டார் சைக்கிள்களில், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களை அந்த வாகனங்களில் இருந்து அகற்றினர். பின்னர் இன்று அவை நசுக்கப்பட்டன் என்று போலீஸ் கமிஷனர் சி. ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், நியூயார்க் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மற்றும் பிற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் புல்டோசர் மூலம் இடித்து தூள் தூளாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை போலவே, ஆந்திராவிலும் இன்று நிகழ்த்தப்பட்டது.