< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடுவானில் திடீரென பழுதான விமான ஏசி! மயக்கமடைந்த பயணிகள்.. வெளியான பரபரப்பு வீடியோ
|25 Jun 2022 6:54 PM IST
டேராடூனில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் குளிரூட்டி இயங்காதது குறித்து பெண் பயணி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் குளிரூட்டி இயங்காததால் 3 பயணிகள் மயக்கமடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பயணி கூறியிருப்பதாவது:- 5.30 மணியளவில் விமானம் கிளம்பியது. தற்போது மணி 6 ஆகிறது. இதுவரை விமானத்தில் குளிரூட்டி வேலை செய்யவில்லை. நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்.
விமானத்தில் புற்றுநோய் நோயாளி ஒருவர் இருக்கிறார். குளிரூட்டி வேலை செய்யாததால் அவர் கிளாஸ்ட்ரோஃபோபிக் (claustrophobic) ஆக உணர்கிறார். இதற்காகவா நாங்கள் 12 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளோம். சீக்கிரமாக நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.