< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விஐபி தரிசனம் "3 நாட்களுக்கு ரத்து.." - திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு
|18 May 2023 2:31 PM IST
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை,
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு குவிந்து வருகின்றர். இதனால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், இலவச டோக்கன்கள் இல்லாத பக்தர்கள், தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனம் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.