< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பீகாரில் வன்முறை சம்பவங்களால் தொடர் பதற்றம் - அமித்ஷாவின் பயண திட்டம் மாற்றம்
|2 April 2023 8:50 PM IST
சஸாரம் பகுதிக்கு அமித்ஷா வருகை தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் கடந்த மார்ச் 30-ந்தேதி ராம நவமியன்று ரோஹ்தாஸ் மற்றும் நாலந்தா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அங்குள்ள சஸாரம் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நாலந்தா மற்று, ரோஹ்தாஸ் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு கூடுதல் மத்திய ஆயுதப்படை, காவல்படைகள் அனுப்புவதை அமித்ஷா உறுதி செய்தார். இதனிடையே பீகார் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, இன்று சஸாரம் பகுதிக்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.