< Back
தேசிய செய்திகள்
கோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை களை கட்டியது
தேசிய செய்திகள்

கோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 'களை' கட்டியது

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

கோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ‘களை’ கட்டியது இதனால் மக்கள் வாகனங்களில் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனா்.

கோலார்

நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல் கோலார் மாவட்டத்திலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் வீடுகளிலும், பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவார்கள்.

அதன்படி நேற்று கோலார் மாவட்டத்தில் முல்பாகல், கோலார் தங்கவயல், கோலார், சீனிவாசப்பூர் உள்பட பல்வேறு இடங்களிலும் அமைந்துள்ள மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது

. குறிப்பாக காய்கறி, பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளையும் மக்கள் வாங்கிச் சென்றனர். வீடுகளில் பூஜைகள் செய்வோர் சிறிய சிலைகளையும், பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் பூஜைகள் செய்வோர் பெரிய விநாயகர் சிலைகளையும் வாங்கிச் சென்றனர்.

அதனால் விநாயகர் சிலைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து இருந்தது. ஏற்கனவே ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் பாதுகாப்பான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்றனர்.

ஒரு சில இடங்களில் ரூ.50 ஆயிரம் வரையில் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனையானதாக கூறப்படுகிறது. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், மினி லாரிகளில் மக்கள் வந்து பெரிய விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதன்மூலம் கோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை களைகட்டி உள்ளது.

மேலும் செய்திகள்