< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; கிராம பாதுகாப்பு படை உறுப்பினர் பலி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; கிராம பாதுகாப்பு படை உறுப்பினர் பலி

தினத்தந்தி
|
29 April 2024 1:38 AM IST

ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராம பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டார்

ஜம்மு,

காஷ்மீரில் உத்தம்பூர் மாவட்டம் பனாரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசாரும், உள்ளூர் இளைஞர்கள் அடங்கிய கிராம பாதுகாப்பு படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். போலீசாரும், கிராம பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கத் தொடங்கினர்.

இருதரப்புக்கும் இடையே அரை மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் அடர்ந்த காட்டுக்குள் தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியதாக தெரிகிறது. இந்த சண்டையில், முகமது ஷெரீப் என்ற கிராம பாதுகாப்பு படை உறுப்பினர் பலத்த காயமடைந்தார். சற்று நேரத்தில் அவர் இறந்து விட்டார்.

இதனிடையே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட அப்பகுதிக்கு விரைந்த ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ஆனந்த் ஜெயின், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளை கண்டுபிடித்து, அவர்களை ஒடுக்க தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்