< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஸ்லீப் மோடில் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்
|4 Sept 2023 2:50 PM IST
ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க (ஸ்லீப் மோடில்) வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது. தற்போது ரோவர் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்த நிலையில், ChaSTE, RAMBHA-LP,ILSA கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமியில் பெறப்பட்டதாகவும் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சூரிய மின்சக்தி முழுவதுமாய் தீர்ந்த பின் பிரக்யான் ரோவர் அருகிலேயே விக்ரம் லேண்டர் உறங்க வைக்கப்படும் எனவும் லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22-ல் செயல்பட துவங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.