< Back
தேசிய செய்திகள்
புதிய மந்திரிகளை வரவேற்க தயாரான விதான சவுதா
தேசிய செய்திகள்

புதிய மந்திரிகளை வரவேற்க தயாரான விதான சவுதா

தினத்தந்தி
|
17 May 2023 2:45 AM IST

புதிய மந்திரிகளை வரவேற்பதற்காக பெங்களூருவில் உள்ள விதான சவுதா தயாராகி வருகிறது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதிய முதல்-மந்திரியை தோ்ந்தெடுக்கும் பணிகளில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாளில் புதிய அரசு அமைய உள்ளது. இதையடுத்து புதிய மந்திரிகளை வரவேற்க விதான சவுதா தயாராகியுள்ளது.

விதான சவுதாவில் மந்திரிகள் இருந்த அலுவலக அறைகளில் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. அந்த அலுவலக அறைகளை சுத்தமாக்கி வா்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புதிய அரசு அமைந்ததும், மந்திரிகளுக்கு அலுவலக அறைகள் ஒதுக்கப்படும். அதில் புதிய மந்திரிகள் தங்களின் அலுவலக பணிகளை தொடங்குவார்கள்.

மேலும் செய்திகள்