
image credit: @ShriRamTeerth
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியீடு!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அயோத்தி,
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற கோவில் கட்டுமானப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து, ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது என்றும், திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோவை ராமஜென்ம பூமி தீரத் சேத்ரா அறக்கட்டளை, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.