< Back
தேசிய செய்திகள்
பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற இளம்பெண் - ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்
தேசிய செய்திகள்

பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற இளம்பெண் - ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்

தினத்தந்தி
|
21 July 2023 5:00 AM IST

டெல்லியில் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து வாலிபரை கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் இளம் பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு வாலிபரை கட்டிப்பிடித்தவாறு மேட்டார் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இருவரும் ஹெல்மெட் அணியாத நிலையில், முன்னால் சென்ற வாகனங்களை அதிவேகத்தில் முந்தி சென்றதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த சர்ச்சை வீடியோ டெல்லி போலீசாரின் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கொண்டு வாலிபரை அடையாளம் கண்ட போலீசார் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபருக்கு போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

மேலும் செய்திகள்