கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ்... கார், பைக்குகளை இடித்து தள்ளியது - ஒருவர் உயிரிழப்பு
|டெல்லியில் அதிவேகமாக சென்ற பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கார்கள், பைக்குகள் மீது மோதியது.
புதுடெல்லி,
டெல்லியில் அதிவேகமாக சென்ற பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் பைக்குகள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். டெல்லியில் உள்ள விஷ்ரம் சவுக் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் மீது வேகமாக மோதியது. பின்னர் அந்த பஸ் நிற்காமல் சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வானகங்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தப்பி ஓட முயன்ற பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.