< Back
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்
தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்

தினத்தந்தி
|
19 July 2022 1:34 PM IST

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையாநாயுடு உள்ளார். இவருடைய பதவிக்காலம் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடை கிறது. இதையொட்டி துணை ஜனாதிபதி தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, எம்.பி திருமாவளவன், வைகோ, உள்ளிட்ட பல தலைவர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்