< Back
தேசிய செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் துணை ஜனாதிபதி சந்திப்பு
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் துணை ஜனாதிபதி சந்திப்பு

தினத்தந்தி
|
18 Sep 2022 12:55 AM GMT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் துணை ஜனாதிபதி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் டெல்லியில் வசித்து வருகிறார். அவரை நேற்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் சந்தித்தார்.

மன்மோகன் சிங் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை தன்கர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்சரண் கவுரை இன்று (நேற்று) சந்தித்து பேசினோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்