< Back
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை அயோத்தி பயணம்
தேசிய செய்திகள்

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை அயோத்தி பயணம்

தினத்தந்தி
|
9 May 2024 4:25 PM IST

சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நாளை (வெள்ளிக்கிழமை) அயோத்திக்குச் செல்ல உள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில், ஹனுமன் கர்ஹி கோயில் மற்றும் குபேர் திலா ஆகிய இடங்களுக்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதீஷ் வருகை தர உள்ளனர். மேலும் சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி பூஜையிலும் அவர் பங்கேற்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அயோத்திக்கு வருகை தந்து ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்