< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்: ஜனாதிபதி மரியாதை
|2 Oct 2023 11:10 AM IST
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
சுதந்திர போராட்ட வீரரும் நாட்டின் 2-வது ஜனாதிபதியுமான லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி விஜய்காட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அரசு சார்பில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.