< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜூன் 22-ந் தேதி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஜம்மு காஷ்மீர் பயணம்...!
|20 Jun 2023 3:30 PM IST
ஜூன் 22-ந் தேதி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஜூன் 22-ந் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு ஜம்மு பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.
இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, குடியரசு துணைத்தலைவர், கத்ராவுக்குச் சென்று மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தில் பிரார்த்தனை செய்கிறார்.
தமது இந்த ஒருநாள் பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் ஆளுநர் மாளிகைக்கும் செல்ல உள்ளார்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.