< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
|5 July 2024 3:25 AM IST
துணை ஜனாதிபதி தன்கார் 2-வது நாள் கொல்லம் மற்றும் அஷ்டமுடி பகுதிகளுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் மற்றும் அவருடைய மனைவி சுதேஷ் தன்கார் இருவரும் நாளை மற்றும் நாளை மறுநாள் (6 மற்றும் 7) ஆகிய 2 நாட்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்த பயணத்தின், முதல் நாளில் இந்திய விண்வெளி மையம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் (ஐ.ஐ.எஸ்.டி.) 12-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில், அவர் சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
இதன்பின்பு, அடுத்த நாள் கொல்லம் மற்றும் அஷ்டமுடி பகுதிகளுக்கு துணை ஜனாதிபதி தன்கார் செல்கிறார். இதனை துணை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.