< Back
தேசிய செய்திகள்
அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
3 July 2024 11:02 PM IST

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த ஜூன் 26-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

96 வயதான எல்.கே.அத்வானிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூன் 27-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 9 மணியளவில் அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்